ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்
ஜெயக்குமார் தனசிங், நெல்லை கிழக்கு காங். தலைவர்

நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதி கரைச்சுத்துபுதூரில் உள்ள அவரின் தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் எழுதி வைத்திருந்த கடிதமும், பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்திவந்தது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயக்குமார் கொலை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்திமுடிக்க அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கானது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com