கால்நடை மருத்துவர் இடமாற்ற விவகாரம்... இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on

கால்நடை மருத்துவர் ஒருவரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு தடைவிதித்த நீதிமன்ற உத்தரவை மதிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசில் கால்நடைத்துறையில் பணியாற்றும் மருத்துவரான ஏ. செந்தில்குமார், கடந்த ஜூன் 2025ஆம் ஆண்டு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டார்.

இடமாற்றம் செய்த 4 மாதங்களுக்குள் திருவண்ணாமலையில் இருந்து, அவர் தூத்துக்குடிக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகவே கடந்த மே29 ஆம் தேதி, இந்த இடமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், இந்த தடையை கால்நடைத்துறை அதிகாரிகள் பொருட்படுத்தாத நிலையில் அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதைதொடர்ந்து, தற்போதைய கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரான கிருஷ்ணா உன்னி, இத்துறையின் முன்னாள் இயக்குநராக இருந்த அம்ரித் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அந்த அதிகாரிகளுக்கு கண்டனமும் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com