குன்னூர் விபத்து
குன்னூர் விபத்து

குன்னூர் விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

குன்னூர் மரப்பாலம் பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து குன்னூர் மரப்பாலம் அருகே 50 அடி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 40 பேருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டதைக் கேட்டு வேதனையடைகிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரணத் தொகையிலிருந்து தலா ரூ. இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. ஐம்பதாயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விபத்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com