தமிழ் நாடு
தி.மு.க. முன்னாள் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அவரது இடம் உட்பட 41 இடங்களில் ஊழல் தடுப்பு காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜியிடமும் இன்று காலையில் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை முதல் எதிரியாகவும், டாஸ்மாக் முன்னாள் அதிகாரி விசாகனை இரண்டாவது எதிரியாகவும் குறிப்பிட்டு புதிய ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மொத்தம்ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே வேலை மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை உட்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.