அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.

தற்போது புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள அவரின் நீதிமன்றக் காவல் இன்று முடிவடைவதால், காணொலிக்காட்சி மூலம் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றார்.

அக்டோபர் 20 ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து 8 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடா்பாக கடந்த புதன் அன்று நடைபெற்ற விசாரணையில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com