திடீர் வெள்ளம்- குற்றால அருவியில் சிக்கிய சிறுவன்... பதைபதைக்க வைக்கும் காட்சி!

குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு
குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று மதியம் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் அஸ்வின் என்பவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். 

நெல்லையைச் சேர்ந்த இந்தச் சிறுவன், குடும்பத்தினருடன் குற்றால அருவிக்கு வந்திருந்தார். நூற்றுக்கணக்கானவர்கள் இன்று அருமையான சூழலை அனுபவித்தபடி அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர். 

குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு
குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கு

மேற்குத்தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்துவருவதால், பழைய குற்றாலம் அருவியில் மதியவாக்கில் திடீரென நீர் அளவுக்கதிகமாகப் பெருக்கெடுத்து வெள்ளமாக மாறியது. அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் சிறிதும் இதை எதிர்பார்க்கவில்லை. 

குற்றால அருவியில் திடீர் வெள்ளத்தால் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி தப்பியோடும் பெற்றோர்
குற்றால அருவியில் திடீர் வெள்ளத்தால் குழந்தைகளைக் கையில் பிடித்தபடி தப்பியோடும் பெற்றோர்

அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடினர். சிறு குழந்தைகளை வைத்திருந்தவர்கள் துரத்திவரும் அருவிக்கு முன்னால் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற வேகத்தில், ஓடிவந்த காட்சி பதைபதைக்க வைக்கிறது.

ஆனால், நெல்லையிலிருந்த வந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் ஏதோ ஒருகணத்தில் வெளிவர முடியாமல் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டார். 

அவரை மீட்க காவல் துறையினரும் தீயணைப்பு- மீட்புத் துறையினரும் தீவிரத் தேடுதலில் இறங்கியுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com