அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க பொது மக்கள் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது.

எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்னைகள் சிலருக்கு இருக்கலாம் ஆனால் இதுவரை அது போன்ற பாதிப்புகள் வெளியில் தெரியவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பக்கவிளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com