தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது:
மக்களவை பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பற்ற மக்கள் ஒன்றுபட்ட போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மத்தியில் சர்வாதிகார, பாசிச ஆட்சி உள்ளது. நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்ல அனைத்து வழிகளும் செய்யப்படுகிறது. அதை தடுத்த நிறுத்த வேண்டும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் நடத்திய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. யாருக்கு எத்தனை தொகுதி, எந்த இடங்கள் என்பதை காட்டிலும் நாடு முக்கியம் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத்துவம் கொடுக்கிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் எண்ணிக்கை மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.” என்று முத்தரசன் கூறினார்.