சட்டமன்றத்தில் ஜனநாயகத்தைக் காயப்படுத்திய நிதியமைச்சர்- இ.கம்யூ. எம்.பி.

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்
Published on: 

சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் , தன் மீது எழுந்த நியாயமான விமர்சனத்தை, அவர் எதிர்கொண்ட விதம் ஜனநாயகத்தைக் காயப்படுத்துவதாக அமைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவை உறுப்பினருமான சுப்பராயன் கூறியுள்ளார். 

”விமர்சனம் மிக, மிக மென்மையான மொழியிலேயே சட்டமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது!

அதை உணர்ந்து, தன்னைத் திருத்திக்கொள்வதாக அறிவித்திருக்கவேண்டிய நிதி அமைச்சர், ஆணவத்தேர் ஏறி அதிரடியைக் கிளப்பினார்!

என்ன கேலிசெய்கிறீர்களா? நான் அப்படித்தான் பேசுவேன் என்று முடித்தார்!

அவரது உடல்மொழியும், மொழிநடையும் மெச்சுவதாக இல்லை என்பது வருத்தமளிக்கிறது!

திருந்தாதஉள்ளங்கள் இருந்தென்னஇலாபம்?

என்ற பாடல்தான் நெஞ்சில் நிழலாடியது!” என்று கே.சுப்பராயன் தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com