ஒரு தொகுதியை தி.மு.க. குறைக்கச் சொன்னது- போட்டுடைத்த மு. வீரபாண்டியன்!

மு. வீரபாண்டியன்
மு. வீரபாண்டியன்
Published on

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிகமான கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஐந்து கட்சிகளுடன் பங்கீடு முடிந்துவிட்டது. 

தே.மு.தி.க.வின் வருகையால், ஏற்கெனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கான இடங்கள் குறைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி மூன்று மாதங்கள் கடுமையாகப் போக்கு காட்டியும் போராடியும் கடந்த முறையைவிட மூன்று தொகுதிகள் கூடுதலாகப் பெற்றுவிட்டது. 

அடுத்து, தே.மு.தி.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தி.மு.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. 

அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கும் வி.சி.க.வும் இடதுசாரிகளும் இன்னும் தொகுதிப் பங்கீட்டை முடிப்பதில் இழுபறி நீடிப்பதில் அதிருப்தியாக இருக்கின்றன. 

இந்நிலையில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் இன்று மதியம் சந்தித்துப் பேசினார். அப்போது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சும் இடம்பெற்றுள்ளது. 

இதனிடையே, இன்று காரல் மார்க்ஸ் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் கடந்த முறை போட்டியிட்ட 6 இடங்களைவிட ஓர் இடம் குறைவாக அதாவது ஐந்து இடங்களை வாங்கிக்கொள்ளுமாறு தி.மு.க. தரப்பு கூறியது என்று தெரிவித்தார். 

ஏற்கெனவே, இதுகுறித்து அந்திமழையில் செய்திக்கட்டுரை வெளியிடப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com