தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணியில் தி.மு.க. குழுவுடன் பேச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவை அமைத்துள்ளது. இது வரும் 27ஆம் தேதியன்று அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைக்குச் செல்லவுள்ளது.
இக்குழுவில் மு.வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்), கே.சுப்பராயன் எம்.பி., இரா.முத்தரசன், கோ.பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை முதல் கட்டப் பேச்சு என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.