சிபிஐஎம் வேட்பாளர்கள்
சிபிஐஎம் வேட்பாளர்கள்

மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி- சிபிஎம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் சு.வெங்கடேசன், திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னையில் இப்போது ஊடகத்தினரிடம் தெரிவித்தார். 

முன்னதாக, இவர்கள் இருவரும் போட்டியிடுவதாக அதிகாரபூர்மற்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்போது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. 

செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “ மதுரை எம்.பி.யான சு.வெங்கடசன் திறம்படச் செயல்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் சச்சிதானந்தம் 35 ஆண்டுகளாக முழு நேர ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இளைஞர் அமைப்பு, விவசாயிகள் சங்கம் ஆகியவற்றிலும் செயல்பட்டுள்ளார். மாநிலக் குழுவிலும் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com