உச்சநீதிமன்றத் தீர்ப்பு- சிபிஎம் அதிர்ச்சி

K. Balakrishnan
கே. பாலகிருஷ்ணன்
Published on

திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

”திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தர்காவில் வழிபாடு நடத்துவதற்கு ரம்ஜான்,‌‌ பக்ரீத் நாட்கள் தவிர மற்ற நாட்கள் தடை விதிப்பது என்ற சென்னை உயர்நீதிமன்ற முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட வழிபாட்டு இடம் என்பது, எல்லா காலத்திலும் வழிபாட்டுக்கான இடம் தான். சில பண்டிகைகளில் 'மட்டும்' அங்கே வழிபடலாம் என்று உத்தரவிடுவதும், இவ்வாறு கட்டுப்பாடுகள் போடுவதும் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு பிளவு மூட்டும் சங்‌ பரிவார மதவெறி சக்திகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.‌ மக்கள் ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்பதில் உறுதி காட்டிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.” என்று கே. பாலகிருஷ்ணன் தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com