மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை
மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை

இலங்கை அரசுக்குக் கோரிக்கை - மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை!

இலங்கையில் நடைபெற்ற போரில் நிகழ்த்தப்பட்ட மனிதவுரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை விசாரிக்க அந்நாட்டு அரசே சுயேச்சையான நம்பகமான உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சியின்தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை சென்னையில் இன்று மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். 

வரக்கூடிய 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் சராசரியான தேர்தல் அல்ல என்றும் தேசத்தின் எதிர்காலத்தை, அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசமைப்புச்சட்டம், மாநில உரிமை, வேலைவாய்ப்பு, வரிப்பகிர்வு, கல்வி, விவசாயம், தனியார்மயம் கைவிடல்- பொதுத்துறைப் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் - தொழில் பாதுகாப்பு, தமிழக வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, உயர்மட்ட ஊழல் தடுப்பு, தேர்தல் சீர்திருத்தம், ஒடுக்குமுறையை அகற்றி உரிமையை நிலைநாட்டுதல், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், கருத்துசுதந்திரப் பாதுகாப்பு, மீனவர் நலன் என பல்வேறு விவகாரங்களுடன் இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 

logo
Andhimazhai
www.andhimazhai.com