த.வெ.க. கூட்டணிக் கூட்டம் - சி.பி.எம். நிராகரிப்பு!

K.Balakrishnan, CPM
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம்.
Published on

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கூட்டத்தில் சி.பி.எம். பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுக் கட்சிகள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ள, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

த.வெ.க.வின் முதல் கூட்டத்தில், சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய இரு கட்சிகளுக்கும் கலந்துகொள்ளாத நிலையில், இரண்டாவது கூட்டணி கூட்டத்திலும் சி.பி.எம். பங்கேற்காது என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் தலைமைக் குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

” த.வெ.க.வின் அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறது. ஓர் ஆட்சி அமையாமல் போய்விடும் என்ற காரணத்தால்தான் த.வெ.க.விற்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம்.

நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. இடதுசாரிக் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்து உள்ளோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.” என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com