பொதுக்குழுவில் பேசுகிறோம்- சி.வி.சண்முகம் தரப்பு பதில்

சி.வி. சண்முகம்
சி.வி. சண்முகம்
Published on

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்றும் அப்படி கூட்டும்போது அதில் தாங்கள் பேசுவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பு கூறியுள்ளது. 

கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலையில் மா.செ.கூட்டம் நடைபெற்றது. அதே சமயம், சி.வி.சண்முகம் தரப்பில் அவருடைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், ஒரே கட்சிதானே, வாருங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என பழனிசாமி கூறியிருக்கிறார்; அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்; பொதுக்குழுவைக் கூட்டுங்கள்; அதில் பேசலாம் என்றார்.

மேலும், த.வெ.க. கூட்டணியை வேண்டாமென எடப்பாடி மறுத்துவிட்டதாகவும், இதைப்போல தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளையும் கூட்டணியிலிருந்து வெளியேறச் செய்ததும் அவர்தான் என்றும் சண்முகம் குற்றஞ்சாட்டினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com