சிலிண்டர் தட்டுப்பாடு… சாப்பாட்டு விலையை உயர்த்துகிறதா ஹோட்டல்கள்?

சிலிண்டர் தட்டுப்பாடு… சாப்பாட்டு விலையை உயர்த்துகிறதா ஹோட்டல்கள்?
Published on

கேஸ் தட்டுப்பாட்டால் உணவு விலை ஏற்றம் இருக்காது என ஹோட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை ஹோட்டல்கள் சாப்பாட்டின் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஹோட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது: கடந்த 2 நாள்களாக கேஸ் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் பிரதமர், உள்துறை அமைச்சர், பெட்ரோலிய துறை அமைச்சருக்கு சென்னை ஹோட்டல் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.

தற்போது நிலவுகின்ற கேஸ் தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (எஸ்மா) அமல்படுத்த வேண்டும். எஸ்மா சட்டத்துக்குள் ஹோட்டல்களை கொண்டு வர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக அவரும் தெரிவித்துள்ளார். உணவகங்கள் மூடப்படுப்படுவதை தமிழக அரசும், ஒன்றிய அரசும் நிறுத்தும் என நம்பிக்கையோடு உள்ளோம்.

ஏற்கெனவே கேஸ் புக் செய்தால் உடனே கொண்டுவார்கள். இப்போது இரண்டு மூன்று நாள்கள் ஆகும் என்கிறார்கள். பெங்களூரில் இன்று உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அந்த நிலை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது. கேஸ் தட்டுப்பாட்டால் உணவு விலை ஏற்றம் இருக்காது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் தான் இந்த பதற்றமே. இரண்டு மூன்று நாள்களில் போர் முடிவுக்கு வந்துவிட்டால் உண்மை நிலைவரம் தெரியும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com