திருடப்பட்ட எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர் விவரங்கள்... ஹேக்கர்கள் கைவரிசை!

SBI bank data leaked in the dark web
எஸ்.பி.ஐ. வங்கியின் தரவுகளை திருடிய ஹேக்கர் குழு
Published on: 

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியின் தரவுகள் திருடப்பட்டு, டார்க் வெப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ.யின் 3.75 இலட்சம் தரவுகளும், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட  தகவல்களும் கசிந்திருப்பது தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிரியூசிம் என்ற ஹேக்கர் குழு தகவல்களைத் திருடியிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி.ஐ. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

”கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, வங்கியின் வாடிக்கையாளர் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது.

டார்க் வெப்பில் கிடைக்கக்கூடிய எஸ்.பி.ஐ. தொடர்பான 3,75,000 தரவுகளை முதற்கட்டமாக பகுப்பாய்வு செய்ததில், 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. கசிந்த தகவல்களில் வாடிக்கையாளர்களின் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், பெயர்கள், பாலினம், மின்னஞ்சல் முகவரிகள், வசிப்பிட முகவரிகள், கிளை, கடன் விண்ணப்பங்கள் உட்பட்டவை இருக்கின்றன.

தொடர்ந்து, உடனடியாக சைபர் தடுப்பு நெறிமுறைகளை வங்கி செயல்படுத்தியது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சைபர் தாக்குதலால், வங்கியின் முக்கிய வணிகச் செயல்பாடுகள், நிதி செயல்திறன் ஆகியவற்றில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தச் சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.” என்று எஸ்.பி.ஐ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com