தமிழ் நாடு
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், ஆவின் கண்காணிப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆட்சியில் பெயர்போன அதிகாரியாக வலம்வந்த டேவிட்சன், தேர்தலை முன்னிட்டு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
பிறகு, அவரின் ஒரு பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டது.
அதையடுத்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் செல்வாக்காக இருந்துவந்தவர்களை வரிசையாக மாற்றிவருகிறது. அதன் ஒரு பகுதியாக இவரும் டம்மி பதவி எனக் கருதப்படும் ஆவின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.