செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து
செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து

சிவகாசி பட்டாசு வெடி விபத்து; பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 7 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடி விபத்தில் 3 ஆண்கள், 5 பெண்கள் என 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வே விபத்துக்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து நடப்பது கவலை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com