கூட்டணி ஆட்சி கோரிக்கை... மீண்டும் சர்ச்சையை கிளப்பிய மாணிக்கம் தாகூரின் புது ட்வீட்!

மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டதாக வெளியான ஊடக செய்திகளை அக்கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கூட்டணி ஆட்சி நிபந்தனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த 40 மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ட்வீட்டுகள் குறித்து வேதனை தெரிவிக்கப்பட்டது என கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் கூட்டணி ஆட்சி தொடர்பாக பதிவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி கூட்டம் தொடர்பாக India Today செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 2026 தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று வென்றால் கூட்டணி ஆட்சி குறித்து நிபந்தனை விதிக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியை ஷேர் செய்துள்ள மாணிக்கம் தாகூர், “இது முழுமையாக கற்பனையானது... உண்மை வெகுதொலைவில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com