'குளிர்சாதன வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதிகள்!'

Aadhav arjuna
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published on: 

சட்டப்பேரவையில் இன்று துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அறிவிப்புகளை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்தார்.

இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத் துறை அறிவிப்புகள்:

1) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

2) தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான விமானக் கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும்.

3) சிறப்புப் பயிற்சிகளை அளிக்க 10 வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும், 10 நிபுணத்துவப் பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவர்.

4) தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, கோ-கோ, சிலம்பம், களரிப்பயிற்று, மல்லர்கம்பம் உட்பட்ட விளையாட்டுகளை உலக அளவில் கொண்டுசெல்ல ரூ.42 கோடி செலவில் தமிழ்நாடு கிராமிய பாரம்பரியப் போட்டிகள் நடத்தப்படும்.

5) கரூர், கடலூர், கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் தலா ரூ. 14 கோடியில் புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

6) அனைத்து மாவட்டங்களிலும் ரூ.15 கோடி செலவில் விளையாட்டு உபகரண வங்கி அமைக்கப்படும்.

7) உலகத்தரத்திலான பயிற்சியாளர்களை உருவாக்க தேசிய விளையாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பயிற்சியாளர் பட்டயப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com