நடிகர் சூரி
நடிகர் சூரி

எங்கு தவறு நடந்தது...? வேதனைப்பட்ட நடிகர் சூரி!

வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் விடுபட்டுள்ளதால் தன்னால் வாக்களிக்க முடியவில்லை என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. காலையிலேயே, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற திரை நட்சத்திரங்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில், நடிகர் சூரி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தன் மனைவியுடன் சென்றுள்ளார். அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார், நடிகர் சூரி.

அதில், “கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்தேன். ஆனால், இந்த முறை பெயர் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். வாக்களர் பட்டியலில் என் மனைவி பெயர் உள்ளது. என் பெயர் இல்லை. ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததெனத் தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன், தயவுசெய்து அனைவரும் நூறு சதவீதம் வாக்களியுங்கள். அது நாட்டுக்கு நல்லது.” என்று சூரி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com