சென்னையில் இருமடங்கு உயர்ந்த டெங்கு பாதிப்பு!

Dengue fever
டெங்கு பாதிப்பு
Published on: 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சென்னையில், 605 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,290 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடப்பாண்டில், கடந்த வாரம் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,000 பேர் ஆகும்.

சென்னையில் ஒரு மாதத்தில் டெங்கு பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில், 72 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், டெங்கு அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

1) திடீரென அதிக காய்ச்சல்.

2) தலைவலி, உடல்வலி, தசை - மூட்டு வலி.

3) வாந்தி, வயிற்றுவலி.

4) மூக்கு அல்லது ஈறுகளில் ரத்தம் வடிதல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் குடங்கள், பாத்திரங்கள், வாளிகள், தண்ணீர்த் தொட்டிகள் ஆகியவற்றை எப்பொழுதும் மூடி வைக்க வேண்டும் என்றும் தண்ணீர் காலியானதும் அவற்றைச் சுத்தமாக தேய்த்துக் கழுவ வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com