தமிழகத்தில் ஒரே நாளில் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு!

Dengue fever
டெங்கு காய்ச்சல்
Published on

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால், டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் தற்போது பெருகியுள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நடப்பு 2026ஆம் ஆண்டில், செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை இயக்ககம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 244 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 16,577ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட்ட 10 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பைத் தடுக்க, கொசு ஒழிப்பு பணியில் 25,000-க்கும் மேற்பட்டவர்களை ஈடுபட்டுள்ளதாகவும், டெங்கு பரவலைத் தடுக்கவும், கொசு உற்பத்தியை ஒழிக்கவும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com