அண்ணாமலை நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு!

அண்ணாமலை நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு!

சென்னையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கும் என் மண் என் மக்கள் நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைவா் கே. அண்ணாமலை ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தார்.

இந்த நடைபயணம் வரும் 11ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவா் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்துக்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

மேலும் தோ்தல் நெருங்கும் நேரத்தில் வடமாநிலங்களில் பா.ஜ.க. நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்படுகிறது . இதை கருத்தில் கொண்டு பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சென்னை சென்ட்ரல் அருகே மின்ட் தங்க சாலையில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடத்த மட்டும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com