சட்டப்பேரவையில் வீட்டுவசதி – நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் ப. ராஜ்குமார் வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
1) சென்னை பெரம்பூரில் சாலையோரங்கள், இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்கு ரூ. 111 கோடியில் 462 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும்.
2) சென்னை, இதர நகரங்களி்ல் உள்ள 208 அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டப்பகுதிகளில் ரூ. 355 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
3) சென்னை, இதர மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் நில உரிமை கொண்ட ஏழைக் குடும்பங்கள், கான்கிரீட் கூரையுடன் 15,000 தனி வீடுகள் கட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ. 2.50 லட்சம் நிதி வழங்க ரூ.987.42 கோடி ஒதுக்கப்படுகிறது.
4) தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள 20 திட்டப்பகுதிகளில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து புதிதாக 12,648 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.2,882.62 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்யப்படும்.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் சென்னை மாநகர் சி.ஐ.டி. நகரில் ரூ. 18 கோடி மதிப்பீட்டில், வாரிய வாடகைத் திட்டத்தின் கீழ் 20 குடியிருப்புகள் கட்டப்படும்.
6) சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், இராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ. 45 கோடி செலவில் 564 மனைகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.
7) சென்னை, கடலூர், மதுரை, திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சுயநிதித் திட்டத்தின் கீழ் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.914 கோடியில் கட்டப்படும்.