தமிழ் நாடு
முதலமைச்சராக விஜய் பதவியேற்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் அமைச்சர்களுக்கு உரிய துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சருக்கு வழக்கம்போல உள்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பொது நிர்வாகம் ஆகியவற்றுடன், இளைஞர் நலன், மகளிர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற ஒன்பது பேருக்கான துறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பொறுப்பு ஆளுநர் அர்லேகரை, இன்று காலையில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர்களுக்கான துறைகளை முதலமைச்சர் விஜய் பரிந்துரை செய்து அளித்த பட்டியல் வழங்கப்பட்டது. அதை பொறுப்பு ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.