தேனிசைத்தென்றல் தேவா குடும்பத்தில் வீசிய கோரப்புயல் !

கார்த்திக் சபேஷ்
கார்த்திக் சபேஷ்
Published on: 

தனது 40 ஆண்டுகால இசைப்பயணத்தில் 400 படங்களுக்கும் மேல் இசையமைத்து தமிழ் ரசிகர்களால் தேனிசைத்தென்றல் என்று கொண்டாடப்பட்ட தேவா குடும்பத்தில் ஒரு வருடத்துக்குள் அடுத்தடுத்து மூன்று பேர் காலமாகியிருப்பது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தேவாவின் இடது வலது கரங்களாக செயல்பட்டவர்கள் அவரது தம்பிகளான சபேஷும் முரளியும். இளையராஜாவிடம் 500 படங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவசாலிகளான இவர்கள் ஒரு கட்டத்தில் தேவாவிடம் முழுமையாக தங்களை அர்ப்பணித்து அவரது பல ஹிட்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். குறிப்பாக பின்னணி இசையில் இவர்களது பங்களிப்பு தேவாவுக்கு யானை பலமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று சபேஷ் காலமானார். அந்த இறப்பின் வலியிலிருந்த மீளமுடியாமல் தவித்து வந்த தேவா தனது சகோதரர் இறந்த அதே அக்டோபர் மாதம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்று மாரடைப்பால் காலமானார்.

இந்த இரு மாபெரும் இழப்புகளிலிருந்தே அந்த குடும்பம் மீண்டு வரமுடியாத நிலையில் நேற்று திங்களன்று சபேஷின் மகனும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்த கார்த்திக் சபேஷ் தனது 37 வயதில் காலமாகியுள்ளார்.

வல்லவன், பட்டத்து யானை, என்.ஹெச் 7, குளிர் 100,தம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் கார்த்திக்.

கார்த்திக் சபேஷின் திடீர் மறைவால் அவரது அன்பு மனைவி ரம்யா கார்த்திக் மற்றும் அவர்களது இரு மகள்கள் பிரிஷானிதாரா, ஹைரானிதாரா ஆகியோருக்கும், அவரது மூத்த சகோதரிகள் கீதா சபேஷ் மற்றும் அர்ச்சனா சபேஷ் உள்ளிட்டோருக்கும் சினிமா பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com