தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்
தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்

ராதிகாவை எதிர்த்து விஜயகாந்த் மகன்!... தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான தே.மு.தி.க.வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தற்போது அறிவித்துள்ளார்.

அதன்படி, விருதுநகர் வேட்பாளராக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்

1. மத்திய சென்னை - பார்த்தசாரதி

2. திருவள்ளூர் - நல்லதம்பி

3. கடலூர் - சிவக்கொழுந்து

4. தஞ்சாவூர் - சிவநேசன்

5. விருதுநகர் - விஜய பிரபாகர்

தே.மு.தி.க.வின் வேட்பாளர்களில் நல்லதம்பி, பார்த்தசாரதி, சிவக்கொழுந்து ஆகிய மூவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

முன்னதாக, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com