தமிழ் நாடு
எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதில் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த தே.மு.தி.க. ஒருவழியாக தி.மு.க. அணியில் சேர்ந்துள்ளது.
சற்றுமுன்னர், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவும் அவரின் தம்பி சுதீஷ், பிற நிர்வாகிகளும் தி.முக. தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அவர்களை மூத்த அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோர் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.
துணைமுதலமைச்சர் உதயநிதியும் வாசலில் பரபரப்பாக நின்றுகொண்டிருந்தார்.
அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் பொன்முடி முதலியோர் அவர்களின் வருகையையொட்டி அறிவாலய வாசலின் முன்பாக பரபரப்பாகக் காணப்பட்டனர்.
உள்ளே சென்ற தே.மு.தி.க. குழுவினர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும் அப்போது உடனிருந்தார்.