அ.தி.மு.க. தலைமை அலுவலகம்
அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.- 5 தொகுதிகளில் போட்டி!

மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 5 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

புதிய தமிழகம் கட்சிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் எஸ்.டி.பி.ஐ.யும், தென்காசியில் புதிய தமிழகம் கட்சியும் போட்டியிடவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக, அ.தி.மு.க.வின் தலைமையகத்தில் இன்று காலையில் அக்கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com