தேமுதிக தலைமை அலுவலகம்
தேமுதிக தலைமை அலுவலகம்

தே.மு.தி.க செய்தி தொடர்பாளர் மீசை ராஜேந்திரன் நியமனம்!

தேமுதிகவின் செய்தி தொடர்பாளராக நடிகர் மீசை ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

தேமுதிகவின் சமூக ஊடக அணியை உருவாக்கி, அதற்கான நிர்வாகிகளை நியமித்துள்ளார். சமூக ஊடக அணி செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் என்பர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை செயலாளராக அரவிந்தன், மகேந்திரன், தமிழரசன், சிவக்குமார் நாகப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதை போல், கட்சியின் செய்தி தொடர்பாளராக நடிகர் மீசை ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தேமுதிக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் 10 பேர் கொண்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com