விஜயகாந்த் கடைசியாகப் பங்கேற்ற தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சி.
விஜயகாந்த் கடைசியாகப் பங்கேற்ற தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சி. (கோப்பு படம்)

காலமானார் நடிகர் விஜயகாந்த்!

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இன்று காலை அவர் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

மறைந்த விஜயகாந்தின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சற்று முன்னர் கொண்டுவரப்பட்டது.

நுரையீரல் அழற்சி காரணமாக அவர் கடுமையாக அவதிப்பட்டார்; செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்கவில்லை என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் இதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தேறியது என்று கூறப்பட்டது. அதையடுத்து கடந்த 12ம் தேதி அவர் வீடு திரும்பினார்.

தொடர்ந்து, டிசம்பர் 14ஆம் தேதி அன்று தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com