அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.க.வில் 2 மாவட்டச் செயலாளர்கள் அதிரடி மாற்றம் - அன்றே எச்சரித்த ஸ்டாலின்!

தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், தி.மு.க.வில் இரண்டு மாவட்டச்செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 

வடசென்னை மாவட்டப் பொறுப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகரும், பெரம்பலூர் பொறுப்பாளராக வீ. ஜெகதீசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

”கட்சியின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவரும் த. இளைய அருணாவை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.” என்றும்,

“பெரம்பலூர் மாவட்டச்செயலாளராகப் பணியாற்றிவரும் குன்னம் இராஜேந்திரன், தன் உடல்நலக் குறைவு காரணமாக, தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொண்டதால், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற வேப்பந்தட்டை வீ. ஜெகதீசன் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.” என்றும்

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதியன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றங்கள் வரும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தேர்தலுக்கு முன்னரே கட்சிக்குள் அதிரடி மாற்றம் நடந்திருப்பது அக்கட்சியினரிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com