தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது!

தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது!
Published on

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக, அதிமுக கட்சிகள் நேர்காணலை இன்று நடத்தி வருகிறது.

திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், இன்று காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. முதலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து வேட்பாளர் நேர்காணல் தொடங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தருமபுரி, கடலூர், ஈரோடு தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. தொகுதி நிலவரம், வெற்றி பெறும் வாய்ப்புக் குறித்து முதலமைச்சர் நேர்காணல் நடத்துகிறார்.

அதேபோல், அதிமுக சாா்பிலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

கட்சியின் அலுவலகமான எம்.ஜி.ஆா். மாளிகையில் இன்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் நிலையில், நாளை 20 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com