மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமா. உடன் அமைச்சர் நேரு.
மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமா. உடன் அமைச்சர் நேரு.

மு.க.ஸ்டாலினுடன் வீரமணி, முத்தரசன், திருமாவளவன் சந்திப்பு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சிக் கூட்டணி தலைவர்கள் கி.வீரமணி, முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

மு.க.ஸ்டாலினுடன் தி.க. தலைவர் வீரமணி
மு.க.ஸ்டாலினுடன் தி.க. தலைவர் வீரமணி

மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஸ்டாலினைச் சந்தித்து, கள நிலவரத்தை எடுத்துக்கூறினர்.

மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள்
மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மையக் குழு உறுப்பினர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் நேற்று மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.

இன்று காலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தன் பரப்புரை அனுபவத்தை வீரமணி அவருடன் பகிர்ந்துகொண்டார்.

மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமா
மு.க.ஸ்டாலினுடன் வி.சி.க. தலைவர் திருமா

வி.சி.க. தலைவரும் சிதம்பரம் வேட்பாளருமான எம்.பி. திருமாவளவன், விழுப்புரம் வேட்பாளர் எம்.பி. இரவிக்குமார், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்தனர். அப்போது, அமைச்சர் நேரு உடனிருந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் சிபிஐ கட்சி தலைவர்கள்
மு.க.ஸ்டாலினுடன் சிபிஐ கட்சி தலைவர்கள்

பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச்செயலாளர் வீரபாண்டியன், அக்கட்சியின் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன் எம்.பி., நாகை வேட்பாளர் வை. செல்வராஜ் ஆகியோர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com