முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை!

தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி 38 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இடையே கடுமையான இழுபறி நீட்டித்து வரும் நிலையில், தருமபுரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.

புதுச்சேரியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் பா.ஜ.க. வேட்பாளரைவிட 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com