திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் திமுக அதிகாரப்பூர்வமாகத் இன்று தொடங்கியுள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைற்று வருகிறது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர். மார்ச் 17 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
நாளை (மார்ச் 18) காலை 9 மணிக்கு, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு
நாளை மாலை 4 மணிக்கு மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, இராமநாதபுரம், சிவகங்கை தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.
மார்ச் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு கரூர், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகர், கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய, நீலகிரி
மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு
மார்ச் 20 ஆம் தேதி காலை 9 மணி இராணிப்பேட்டை, வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,
மாலை 4 மணிக்கு தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு.
மார்ச் 21 காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர், அரியலூர்
மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர்
மார்ச் 22 காலை 9 மணிக்கு கடலூர் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு, காஞ்சிபுரம் தெற்கு.
மாலை 4 மணிக்கு திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, சென்னை வடக்கு சென்னை வடகிழக்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.
திமுகவில் போட்டியிட 15,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், இந்த நேர்காணல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

