தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர்ந்து அவமரியாதை- தி.மு.க. கண்டனம்

தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
Published on

அமைச்சரவை பதவியேற்பு விழாவில்  வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர்ந்து அவமரியாதை என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.” என்று பாரதி தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com