தி.மு.க. – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இன்று கையெழுத்தாகிறது!

தி.மு.க. – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இன்று கையெழுத்தாகிறது!

மக்களவைத் தேர்தலுக்காக தி.மு.க. – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க.- காங்கிரஸ் இடையேயான முதல் கட்டப் பேச்சுவார்த்தை ஜனவரி 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொ.ம.தே.க., ம.தி.மு.க., வி.சி.க. ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவைச் சேர்ந்த முகுல் வாஸ்னிக், அஜோய் குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் சென்னை வருகின்றனர்.

மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது, தி.மு.க – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேட்கும் 10 தொகுதிகள் ஒதுக்கப்படுமா எனும் கேள்வி நீடித்துவருகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com