திமுக நிர்பந்திக்கவில்லை – வீரபாண்டியன் விளக்கம்!

வீரபாண்டியன்
வீரபாண்டியன்
Published on

“திமுக ஒருபோதும் நிர்பந்திக்கவில்லை, வேண்டுகோள் தான் விடுத்தார்கள்.” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியனிடம் “தொகுதிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்: “நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் ஒருபோதும் திமுக எங்களை நிர்பந்திக்கவில்லை. வேண்டுகோள் தான் விடுத்தார்கள். பல கட்சிகள் சேர்ந்துள்ள காரணத்தால் எங்களை பரிசீலக்க சொல்லி முதலமைச்சரே கேட்டுக் கொண்டார். கட்டளையிடும், அழுத்தம் கொடுக்கும் தொனியில்லை. ஒத்துழைக்க வேண்டும் என்றுதான் இதுவரை சொன்னார்கள். சுயமரியாதை பாதிக்கப்பட்டிருக்கமானால் நாங்கள் கடந்து சென்றிருப்போம். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் பேசவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com