தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் நாளை கூட்டம்!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதை அறிவித்துள்ளார். 

நாளை மாலை 6.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்திட, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் - தொகுதி அளவில் பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகளிர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com