தி.மு.க. தேர்தல் அறிக்கை: முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமனம்!

திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் 64 பக்க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:

  • மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

  • ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 சட்ட பிரிவு நீக்கப்படும்

  • திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

  • ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

  • இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

  • காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்

  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

  •  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்

  •  குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்

  •  நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

  •  மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்

  •  பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

  •  மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

  •  100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

  •  தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்

  •  பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்

  •  நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்

logo
Andhimazhai
www.andhimazhai.com