திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்தில் கனிமொழி

தொடங்கியது தி.மு.க. பிரச்சாரம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தி.மு.க. தொடங்கிவிட்டது என அக்கட்சியின்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று மாலையில்தன் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவர்தகவலை வெளியிட்டுள்ளார். 

அதில், “ நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.! தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்!” எனக் கூறியுள்ளதுடன், 

”பாசிசம் வீழும்! #INDIA வெல்லும்!” என்ற முழக்கத்துடன் முடித்துள்ளார். 

இந்தப் பதிவுடன், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிவாரியாக நேற்று தொடங்கி நடைபெற்றுவரும் தி.மு.க.வின் ‘பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்கிற தலைப்பிலான பொதுக்கூட்டங்களின் காட்சிகளையும் ஸ்டாலின் பதிந்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com