“திமுகவுக்கே மீண்டும் வாய்ப்பு” - ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
Published on

அடுத்து ஆட்சி அமைக்க திமுகவுக்கே வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம், “திமுக மீண்டும் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஒரு மூத்த அரசியல்வாதியாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ்,“தற்போது எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக பிரிந்து கிடக்கிறது. பாமகவுக்குள் ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை. சூழல் இப்படி இருக்கும்போது அவர்களுக்குத்தானே (திமுக) வாய்ப்பு அதிகம். கண்கூடாகத் தெரிகிறது. எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால் திமுக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் பேசுகிறார்கள். நான் சொல்லவில்லை.”என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com