மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி!

தமிழ்நாடு, புதுச்சேரியின் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மாலை 6.50 மணி நிலவரப்படி ஏறக்குறைய நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

மதுரை, திண்டுக்கல், தருமபுரி உட்பட பல தொகுதிகளில் வேட்பாளர்கள் கையெழுத்திட்டு வெற்றிச் சான்றிதழை வாங்கிச்சென்றாலும், தேர்தல் ஆணையம், இதுவரை முறைப்படியான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com