4 நாள்களுக்குப்பின் பேரவை... எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை!

DMK member E.V.Velu brought calling attention motion
தி.மு.க. உறுப்பினர் எ.வ.வேலு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்
Published on: 

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

இன்று முதல் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நிலையில், முதலாவதாக வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

“கோவை அமுதன் கொலை, கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொலை, திருவொற்றியூரில் தனுஷ்குமார் கொலை, தேனி மாவட்டம் மேகமலை விவகாரம், சென்னையில் 400% சொத்து வரி உயர்வு, மின் கட்டண விவகாரம் ஆகிய ஐந்து விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கி உள்ளேன். பேரவையில் இன்று கேள்வி பதில் நேரம் இல்லாததால் அவசர நிலை கருதி, பேரவைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று எ.வ வேலு வலியுறுத்தி அமர்ந்தார்.

பின்னர், கர்நாடக வனத் துறை 3 தமிழர்களை சுட்டுக்கொன்ற விவகாரம், எண்ணூர் மீனவர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றி விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பாக, துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கும்போது அவையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்கு பேரவைத்தலைவர் பதிலளித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com