(வலமிருந்து) திருமாவளவன், ரவிக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார்
(வலமிருந்து) திருமாவளவன், ரவிக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார்

ஜெயலலிதா பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிய திமுக எம்.பி!

மக்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில், 28 எம்.பி.க்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் எம்.பி. தொல். திருமாவளவன், விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமார், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் ஆகியோர் அடக்கம்

தொல்.திருமாவளவன் - விசிக

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல். திருமாவளவன், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் தொடர்பாக "Mass Religious Conversion of Meenakshipuram - A Victimological Perspective" என்ற தலைப்பில், நெல்லை மனேன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

துரை ரவிக்குமார் - விசிக

எழுத்தாளரும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான துரை ரவிக்குமார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நந்தனர் பற்றி “Hidden History of King Nandan” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாட்டியனின் மகளும் ஆங்கில பேராசிரியருமான தமிழச்சி தங்கபாண்டியன் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

இவர், இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்து, “Diasporic Longing and the Changing Contours of Resistance in the plays of Ernest Thalayasingam Macintyre.”என்ற தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.

கணபதி ராஜ்குமார் - திமுக

கோவையிலிருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கணபதி ராஜ்குமார், ஜெயலலிதா பற்றி கோவையின் மேயராக அதிமுக சார்பில் இருந்தபோது “Evolution of Jayalalithaa as a mass leader” என்ற தலைப்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com