தமிழ் நாடு

தி.மு.க. சார்பில் தேர்தல் வார் ரூம் திறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
”எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள், களத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர் தங்களது தேர்தல் தொடர்பான சந்தேகங்களைக் கேட்கவும், புகார்கள்- கருத்துகளைத் தெரிவிக்கவும் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வார் ரூம் எண் : 08069446900” என்று தி.மு.க. தலைமைக் கழகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.